நாகை மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு அடுத்த சடையன்காடு வ.உ.சி. நகரில் 41 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 1. கிலோமீட்டர் தூரம் உள்ள கப்பி சாலையை தார் சாலையாக மாற்றப்பட்டது. இந்த சாலை அமைத்து 10 நாட்களிலேயே சிதலமடைந்து சேதம் அடைந்தது. இது குறித்து அக்கிராம மக்கள் நாகை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். இதேபோல் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சாலை அமைப்பது உள்ளிட்டவைகளில் பிரச்னைகள் இருப்பதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து கலெக்டர் அருண்தம்புராஜ் விசாரணை செய்து, கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் இளநிலை பொறியாளர்.சுகுமார், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய இளநிலை பொறியாளரான மற்றொரு எஸ்.சுகுமார், வேதாரண்யம் இளநிலை பொறியாளர் சிவஞானம், நாகை உதவிப்பொறியாளர் செல்வம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகிய 5, பேரையும் கூண்டோடு மாற்றம் செய்து அதிரடியாக நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.நாகை மாவட்டத்தில் தரம் இல்லாத சாலைகள் அமைத்த விவகாரத்தில் 4 இளநிலை பொறியாளர்கள் மற்றும் ஒரு உதவி பொறியாளர் கூண்டோடு மாற்றம் செய்துள்ள சம்பவம் அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.