அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார், சூர்யா தம்பதியரின் மூத்த மகள் ஓவியா (12) இவர் அரியலூர் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் ஆதித்யா பிர்லா மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.சிறுவயது முதலே பரதநாட்டியத்தில் ஆர்வம் மிகுதியாக இருந்ததால் அவரது பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் குரு சக்தி செல்லதுரை வி.பி.எஸ் கலைக்கூடம் மூலம் பயிற்சி கொடுத்தனர்.
சிறுமி ஓவியாவும் ஆர்வத்துடன் பரதநாட்டியத்தை கற்றுக் கொண்டார். மேலும் பள்ளிகளில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடி தனது திறமையை வளர்த்துக் கொண்டார். இந்நிலையில் கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் சிவராத்திரி அன்று மாலை நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் நடனத்தில் அனைத்து பாவனைகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி நடனமாடினார். இதனை மெய்மறந்து பார்த்த சக நடன கலைஞர்கள் பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவி ஓவியாவின் பரதநாட்டியத்தை பார்த்து பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.