Skip to content
Home » பெரம்பலூரில் நள்ளிரவில் வீட்டில் தீ…..5பேர் உயிர்தப்பினர்

பெரம்பலூரில் நள்ளிரவில் வீட்டில் தீ…..5பேர் உயிர்தப்பினர்

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் வசித்து வருபவர் ராஜேந்திரன் (48) , இவரது மனைவி லீலாவதி ,இவர்களுக்கு ஜெகதீஸ்வரி, பிரியதர்ஷினி, பிரியா ரமணி, ரவீனா என்ற நான்கு மகள்கள் உள்ளனர். ராஜேந்திரன் கொத்தனார் தொழில் செய்து வருகிறார். ஜெகதீஸ்வரிக்கு மட்டும் திருமணமாகி கணவர் வீட்டில் உள்ள நிலையில் மீதமுள்ள 5 பேர் மட்டும் 10அடி அகலம் 27 அடி நீளம் அளவு கொண்ட கூரை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இவர்கள் தூங்கி கொண்டிருந்த போது திடீரென மேற்கூரை பற்றி எரிந்துள்ளது அலறி அடித்து எழுந்து சத்தம் போட்டுள்ளனர். இவர்களின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வந்தனர். பின்னர் அருகிலிருந்தவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டிலிருந்த மிக்ஸி, கிரைண்டர், பீரோ, கட்டில், டிவி, அடுப்பு, செல்போன் உள்ளிட்ட சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தன.

பிரியாரமணியின் பள்ளி புத்தகங்கள் மற்றும் வீட்டிலிருந்த சில அரசு ஆவணங்கள் சேதமடைந்துள்ளன.முதற்கட்ட விசாரணையில் அவர்கள் வைத்திருந்த சுமார் 10 ஆயிரம் பணமும் எரிந்ததாக கூறப்படுகிறது. நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால் வீடு முற்றிலும் எரிந்து பொருட்கள் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த விபத்திற்கு காரணம் மின் கசிவா அல்லது வேறு காரணமா என்றுபோலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *