இந்திய குடியரசு கட்சியின் திருச்சி மாவட்ட புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதன்படி திருச்சி மாவட்ட செயலாளராக எடைமலைப்பட்டி புதூர் குமார், இளைஞரணி மாவட்ட செயலாளராக சமயபுரம் முத்துக்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நியமன சான்றிதழ்களை திருச்சி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.
இந்நிகழ்வின் போது செல்வராஜ், பாஸ்கர், பாக்யராஜ், செந்தில்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து பேட்டியளித்த மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி,இந்திய குடியரசு கட்சியின் சார்பில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் இன்று நியமிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்திய குடியரசு கட்சி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர்களுடைய வாழ்க்கை மேம்படுத்துவதற்கான பணி மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.