Skip to content
Home » பேனா நினைவுச்சின்னத்திற்கு ஆதரவு 22 பேர்.. எதிர்ப்பு 12 பேர்

பேனா நினைவுச்சின்னத்திற்கு ஆதரவு 22 பேர்.. எதிர்ப்பு 12 பேர்

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் எழுத்தாற்றலை போற்றும் வகையில் மெரினாவில்  அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னத்தை  ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  இந்த நினைவுச் சின்னம் அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கடந்த ஜனவரி 31-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகள், மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர். கூச்சல் குழப்பத்துடன் நடந்து முடிந்த இக்கூட்டம் தொடர்பான மினிஸ்ட்ஸ்சில் எதி்ர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவித்த நபர்கள் குறித்த விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில்

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கல்யாணராமன் – ஆதரவு
சட்டப் பஞ்சாயத்து இயக்க பொதுச் செயலாளர் அருள் முருகானந்தம் – எதிர்ப்பு
ஆம் ஆத்மி கட்சியின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த சங்கர் – எதிர்ப்பு
நொச்சிக் குப்பத்தைச் சேர்ந்த பெருமாள் – ஆதரவு
திருவல்லிக்கேணி வர்த்தகர் சங்கத்தைச் சேர்ந்த வி.பி.மணி – ஆதரவு
பாஜக மீனவர் பிரிவைச் சேர்ந்த நீலாங்கரை முனுசாமி – எதிர்ப்பு
மீனவர் அமைப்பின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த தனசேகர் – ஆதரவு
தேசிய பாரம்பரிய மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னத்தம்பி – எதிர்ப்பு
ராயபுரத்தைச் சேர்ந்த இளங்கோ – ஆதரவு
நொச்சிக் குப்பத்தைச் சேர்ந்த செம்மலர் சேகர் – எதிர்ப்பு
அகில இந்திய பராம்பரிய மீனவர் சங்க நிர்வாகி மகேஷ் – ஆதரவு
மே 17 இயக்க திருமுருகன் காந்தி – எதிர்ப்பு
பெசன்ட் நகர் பாபு – எதிர்ப்பு
பழவேற்காட்டைச் சேர்ந்த சகாயராஜ் – ஆதரவு
சமூக செயல்பாட்டாளர் முகிலன் – எதிர்ப்பு
அகில இந்திய மக்கள் கட்சியைச் சேர்ந்த அண்ணாத்துரை – எதிர்ப்பு
காசிமேடு பகுதியைச் சேர்ந்த இளங்கோ – ஆதரவு
மீனவர் அமைப்பைச் சேர்ந்த காசிமேடு நாஞ்சில் ரவி – ஆதரவு
மீனவர் மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த சங்கர் – எதிர்ப்பு
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – எதிர்ப்பு
நொச்சிக் குப்பத்தை சேர்ந்த தம்பிதுரை – ஆதரவு
தமிழ்நாடு மீனவர் பேரவையைச் சேர்ந்த பார்த்திபன் – ஆதரவு
திருவெற்றியூரைச் சேர்ந்த பிரகாஷ் – ஆதரவு
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மனிமாறன் – ஆதரவு
விருதுநகரைச் சேர்ந்த மீனா – எதிர்ப்பு
பொன்னேரியைச் சேர்ந்த மகிமை ராஜ் – ஆதரவு
விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி – ஆதரவு
எண்ணூரைச் சேர்ந்த நவகுமார் – ஆதரவு
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பரமசிவம் – ஆதரவு
மதுரையைச் சேர்ந்த பசும் பொன் பாண்டியன் – ஆதரவு
பாலவாக்கத்தைச் சேர்ந்த விஜயபாலன் – ஆதரவு
மீனவர் கிராம சபைச் சேர்ந்த ரூபேஷ் குமார் – ஆதரவு
திருவெற்றியூரைச் சேர்ந்த குமரேசன் – ஆதரவு
பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பிரபாகரன் – எதிர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *