புதுக்கோட்டை டவுன் கவினாடுகிழக்கு புதிய அன்னைநகர் பகுதியில் வசிப்பவர் கற்பகமீனாள். இவர் புதுக்கோட்டை ராம்தியோட்டர் குஞ்சப்பா சர்வீஸ் ஸ்டேசன் அருகில் உள்ள ரோட்டில் நேற்று காலை நடந்து சென்றபோதுபைக்கில் வந்தஅடையாளம்யாளம்தெரியாதநபர்கள் பெண்ணின் கழுத்தில் கிடந்த நான்கு பவுன் தங்க செயினைபறித்துக்கொண்டு தலைமறைவாகினர்
இதுதொடர்பாக திருக்கோகர்ணம் காவல்நிலையத்தில்புகார் கொடுத்தனர்.இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதே போல் ரயில்நிலையம் செல்லும் சாலையிலும்,அரிமழம்செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும்
நடந்து சென்ற பெண்களிடம் பைக்கில் வரும் நபர்கள் ஹெல்மெட் அணிந்து வந்து செயின்பறிப்பது தொடர்கதையாக நடக்கிறது. .இதுதொடர்பாக காவல்துறையினர்
தனிப்படை அமைத்து
குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என
சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் புதுக்கோட்டை நகரில் சுற்றும் வெளிமாநில நபர்களை கண்காணித்து அவர்களது முகவரி, போன் நம்பர்,. அவர்கள் எங்கே வேலை செய்கிறார்கள் என்பது போன்ற விவரங்களை போலீசார் சேகரித்து அவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகிறார்கள்.