தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி (57), நேற்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் மயில்சாமியின் உடல், இன்று காலை 10 மணிக்கு சென்னை வடபழனி ஏ.வி.எம் சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. இன்று காலை நடிகர் ரஜினிகாந்த், மறைந்த மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் தன்னுடைய நீண்ட கால நண்பர் மயில்சாமி. அவர் தீவிர சிவ பக்தர். சிவராத்திரி அன்று சிவபெருமான் தன்னுடைய தீவிர பக்தனை அழைத்து சென்று விட்டார் என ரஜினிகாந்த் உருக்கமாக கூறினார். மேலும் விவேக், மயில்சாமி போன்ற நடிகர்களின் மறைவு சமூகத்திற்கே பேரிழப்பு என்று கூறினார்.