ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியையும், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியின் துணை கேப்டன் யார் என பிசிசிஐ குறிப்பிடவில்லை. ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் கேப்டனாக ரோகித்தும், துணை கேப்டனாக பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் தொடர் மற்றும் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் ஜெய்தேவ் உனத்கட் இடம் பிடித்துள்ளார். டெஸ்ட் அணி விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர் ), இஷன் கிஷன் (விக்கெட் கீப்பர் ), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஸ்ரேயஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட். ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேய்ஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல். ஹர்த்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), இஷன் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், ஜெய்தேவ் உனத்கட். இவ்விரு அணிகள் இடையிலான ௩வது டெஸ்ட் போட்டி மார்ச்1 ம் தேதி தொடங்க உள்ளது.