Skip to content
Home » கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மாசி மாத சனி பிரதோஷ விழா…

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மாசி மாத சனி பிரதோஷ விழா…

கொங்குநாட்டு சிவத்தலங்களில் முதன்மையான புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சவுந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர்,

எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம்,விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து மூலவர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரருக்கும் பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மேளதாளங்கள் முழங்க நந்தி பகவானுக்கும், மூலவருக்கும் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு, தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதை தொடர்ந்து கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!