புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் சத்திரம் காமாட்சி அம்மன் ஆலய மகாசிவராத்திரி விழா மற்றும் பாட்டையா குருபூஜை திருவிழா இன்று காலை தொடங்கியது. அரிமளம் ஜெயவிளங்கியம்மன் ஆலயத்தில் இருந்து பால்குடங்கள்,காவடிகள் உடுமலை அருள்வாக்கு சுப்பண்ணசுவாமிகள் வழிநடத்த புறப்பட்டுசத்திரம் காமாட்சி அம்மன் ஆலயத்தை
அடைந்தது.
அதைத்தொடர்ந்து காமாட்சிஅம்மனுக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.
பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.இன்று இரவு காமாட்சி அம்மன்ஆலயத்தில் இருந்து
வெள்ளிக்கரகம் எடுத்து அம்மன் கிராமத்தை வலம்வரும் நிகழ்வும்
பின்னர் அக்கினிச்சட்டி ஏந்தி கிராமத்தை வலம் வந்து பக்தர்களுக்கு
அருள்வாக்கு சொல்லும் நிகழ்வும் நடக்கிறது.
இதில் உடுமலை,கோவை,பொள்ளாச்சி,அரிமழம், சத்திரம் மற்றும்சுற்று வட்டாரகிராமமக்கள்
பங்கேற்றுள்ளனர். இதனால் அரிமளம் பகுதி காலை முதல் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.