Skip to content
Home » புடவையில் ஒரு நடைபயணம்….. தஞ்சையை கலக்கிய 2ஆயிரம் மகளிர்

புடவையில் ஒரு நடைபயணம்….. தஞ்சையை கலக்கிய 2ஆயிரம் மகளிர்

  • by Senthil

தஞ்சை இன்னர் வீல் சங்கம் 1973-2023 தனது பொன்விழா ஆண்டை முன்னிட்டு பாரம்பரிய உடைகளுக்கான கௌரவத்தை மீட்டெடுக்கும் ஓர் உன்னத முயற்சியாக தஞ்சாவூர் இன்னர் வீல் சங்கம் சார்பில் புடவையில் ஓர் நடை பயணம் என்ற போட்டியை  தஞ்சையில் இன்று நடத்தியது.  தஞ்சை பெரிய கோவில் முன்பிருந்து போட்டி தொடங்கியது.

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் போட்டியை தொடங்கி வைத்தார். மேயர் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலைவகித்தனர். இப்போட்டி 18 முதல் 35 வயது வரை உள்ள மகளிர்க்கு 4 கிலோ மீட்டர், 36 முதல் 59 வயது வரை உள்ள 3 கிலோமீட்டர், 60 மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 1 கிலோ மீட்டர் என வயது வாரியாக போட்டிகள் நடைபெற்றது,

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசுத்தொகையும் சான்றிதழும் வழங்கப்பட்டது, மேலும் கல்லூரி மாணவிகளும் இப்போட்டியில் பங்கேற்றனர், இந் நிகழ்ச்சியில் பொன் விழா குழு தலைவர் உஷா நந்தினி உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.முதன் முதலாக இந்த போட்டி தமிழகத்தில் தஞ்சையில் நடத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்தியா முழுவதும் இந்த போட்டிகள் நடைபெறும் என்றும் உஷா நந்தினி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!