தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு இன்று மதியம் நடைபெற்றது. அன்புமணியுடன், ஜி.கே. மணி, வழக்கறிஞர் பாலு, முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி ஆகியோரும் வந்திருந்தனர்.
முதல்வரிடம் பேசியது குறித்து அன்புமணி ராமதாஸ் கூறியதாவது: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு குறித்து முதல்வரிடம் பேசினேன். இந்த உள் ஒதுக்கீடு மூலம் வேறு எந்த ஜாதிக்கும் பாதிப்பு இல்லை என்றார்.