இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் நேற்று டில்லியில் தொடங்கியது. ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. நேற்று மாலை வரை ஆடிய ஆஸ்திரேலியா10 விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு இந்தியா வேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, ராகுல் ஆகியோர் பேட் செய்தனர்.ஆட்ட நேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி21 ரன்கள் எடுத்தது.
இன்று காலை 2ம் நாள் ஆட்டம் தொடங்கியது. மதிய உணவு இடைவேளைக்குள் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராகுல்(17), ரோகித்(32), புஜாரா(0), ஸ்ரேயஸ் அய்யர்(4)ஆகியோர் அவுட் ஆனார்கள். இந்த 4 விக்கெட்டுகளையும் நேஷன் லயன் மட்டுமே எடுத்துள்ளார். தற்போது ஜடேஜா(15), கோலி(14)ஆகியோர் ஆடி வருகிறார்கள். இந்த ஜோடி நிலைத்து ஆடினால் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். இல்லாவிட்டால் இந்த ஆட்டம் தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக செல்லும் நிலையில் இருப்பதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் கணித்து உள்ளனர்.
புஜாராவுக்கு இது 100வது டெஸ்ட் என்ற பெருமையுடன் களம் இறங்கினார். 7 பந்துகளை சந்தித்த அவர் டக் அவுட் ஆனார். இது அவருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக அமைந்தது. இன்று 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய நேஷன் லயன் இதுவரை இந்தியாவின் 99 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இன்னும் 1 விக்கெட் எடுத்தால் டெஸ்டில் இந்தியாவின் அதிக விக்கெட் சாய்த்த ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெறுவார்.