யூத் ரெட் கிராஸ் சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வர் தமிழரசு தலைமையில், இரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, அரியலூர் மாவட்ட கிளை பொறுப்பாளர்கள் சார்பில், யூத் ரெட் கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் செயலருமான பேராசிரியர் ஸ்டீபன், துணைத் தலைவர் துரை செல்வராஜ், துணை தலைவர் எஸ் எம் சந்திரசேகர், மேனாள் தலைவர் நல்லப்பன் மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி மாணவர்களிடமிருந்து 54 யூனிட் ரத்தம் பெறப்பட்டு அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கிக்கு கொடுக்கப்பட்டது. கல்லூரியின் சார்பில் இரத்த தானம் செய்த மாணவர்களுக்கு மதிய உணவு, முட்டை, சுண்டல் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்த கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப் பட்டது.