தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக இருப்பவர் இறையன்பு. இவரது பதவிக்காலம் ஜூன் மாதம் நிறைவடைகிறது. இந்த நிலையில் இறையன்பு இந்த மாத இறுதியில் விஆர்எஸ் வாங்குகிறார். அதைத்தொடர்ந்து அவர் தமிழக அரசின் மாநில தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்படலாம் என தெரிகிறது. இறையன்புக்கு பிறகு புதிய தலைமை செயலாளராக யார் வருவார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளர் பொறுப்பில் உள்ள சிவதாஸ் மீனா அல்லது நிதித்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம் ஆகியோரில் ஒருவர் புதிய தலைவமைசெயலாளராக நியமிக்கப்படலாம் என தெரிகிறது.