திருச்சி மாவட்டம், துறையூரில் 17.2.2023 வெள்ளிக்கிழமைஅரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
நடைபெற்றது. இம்முகாமினை முசிறி மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு அய்யா சாமி தலைமையேற்று தொடங்கி வைத்தார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி மணிமேகலை முன்னிலை வைத்தார் சிறப்பு விருந்தினர்களாக வட்டார கல்வி அலுவலர் மார்ட்டின் மற்றும் நகர் மன்ற தலைவர் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரகு ஆகியோர் கலந்து கொண்டனர்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் புகழேந்தி அணைவரையும் வரவேற்றார். முகாமில் உடல் இயக்க குறைபாடு அறிவுசார் குறைபாடு பார்வை திறன், செவித்திறன் குறைபாடு உடைய குழந்தைகளை சிறப்பு மருத்துவர்கள் மருத்துவர் குமார். மருத்துவர் அன்பழகன் மருத்துவர் சுந்தரவேலு மருத்துவர் ஜெயந்தி ஆகியோர் கண்டறிந்து தேசிய அடையாள அட்டை (யூ டி ஐ டி) அட்டை ஆகியவற்றை வழங்கினார் முகாமில் 116 பேர் கலந்து கொண்டனர். அதில் உடலியல்
குறைபாடு 36 நபர்கள், அறிவிசார் குறைபாடு நபர்கள் 35, செவித்திறன் குறைபாடு 12 நபர்கள் மற்றும் பார்வை திறன் குறைபாடு உடையோர் 33 நபர்கள் பயனடைந்தனர் . முகாமிற்கான சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் செய்திருந்தார் முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய சிறப்பு பயிற்றுநர்கள் சோபியா , எஸ்தர் செந்தமிழ் செல்வி , நிரஞ்சனா ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர் . மருத்துவர் நடேசன் நித்யானந்தம் நன்றி உரையை தெரிவித்தார்.