மகாசிவராத்திரி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிவன் கோயில்களில் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறும். முக்கியமான கோயில்களில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நடனங்கள் நடத்தப்படும். இதையொட்டி நாளை திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட கலெக்டர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.