புதுக்கோட்டை மன்னர் கல்லூரி ஆதிதிராவிடர் நல விடுதி(2) மாணவர்கள் இன்று காலை சாப்பாடு தயாரிக்கப்பட்ட அண்டா, மற்றும் தங்களுக்கு பரிமாறப்பட்ட சாப்பாடு தட்டுகளுடன் புதுக்கோட்டை எஸ்.பி. ஆபீசுக்கு வந்து முற்றுகையிட்டனர். இது குறித்து போலீசார் மாணவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு தரமானதாக இல்லை. விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறினார்.
இது குறித்து ஆதிதிராவிட நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் அங்கு வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குறைகள் போக்கப்படும் எநன அதிகாரிகள் உறுதி அளித்ததால் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.