தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று சேலம் சென்றார். அங்கு சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார். சேலம் கோரிமேட்டில் முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதி பணியாற்றிய பழம் பெருமை வாய்ந்த மாடர்ன் தியேட்டர்ஸ் படப்பிடிப்பு நிறுவனம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பிற்பகலில் அங்கு சென்று பணிகளை பார்வையிட்ட முதல்வர், அந்நிறுவனத்தின் முன் தனியாக நின்று செல்பி எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம், தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags:ஸ்டாலின் செல்பி