Skip to content
Home » தவறாக நடக்க முயன்ற தமிழ்ப்பட வில்லன்…. ரஜினி பட நடிகை பகீர்

தவறாக நடக்க முயன்ற தமிழ்ப்பட வில்லன்…. ரஜினி பட நடிகை பகீர்

  • by Senthil

திருவனந்தபுரம் மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் அஞ்சலி நாயர். இவர் தமிழில் நெல்லு, உன்னையே காதலிப்பேன், ரஜினியின் அண்ணாத்த, விஜய் சேதுபதி உடன் மாமனிதன் போன்ற படங்களில் நடித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு அனீஷ் என்கிற இயக்குனரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற அஞ்சலி நாயர் கடந்த ஆண்டு அஜித் என்கிற உதவி இயக்குனரை திருமணம் செய்துகொண்டார். நடிகை அஞ்சலி நாயரும், இயக்குனர் அஜித்தும் திருமணம் ஆனதில் இருந்தே சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்கள். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்றாலும், மகிழ்ச்சியுடன் புதிய வாழ்க்கைக்குள் நுழைய முடிந்தது. திருமணமான ஐந்தே மாதத்தில் இந்த தம்பதிக்கு குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் நடிகை அஞ்சலி நாயர் யூடியூப் சேனல் மூலம் சினிமாவில் தான் சந்தித்த கசப்பான அனுபவங்கள் குறித்து மனம்விட்டு பேசி வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் தனியார் டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தமிழ் படத்தில் நடித்தபோது வில்லன் நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்ற பகீர் தகவலை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.  அதில் அவர் கூறி இருப்பதாவது :- “கேரளாவை சேர்ந்தவளாக இருந்தாலும் எனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும். பூர்வீகம் தமிழ்நாடா என கேட்கும் அளவும் சரளமாக தமிழ் பேசுவேன். இதனால் தமிழ் மொழியில் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என நான் விரும்பினேன். நான் தமிழில் முதன்முதலில் நடித்தபோது, வில்லன் நடிகர் ஒருவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அவர் அப்படத்தில் வில்லன் மட்டுமல்ல இணை தயாரிப்பாளராகவும் இருந்தார்.

ஷூட்டிங் இல்லாத சமயத்திலும் என்னை வெளியே செல்ல அனுமதிக்காமல் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்தார். என்னிடம் புரபோஸ் செய்ததோடு, நான் எங்கு போனாலும் பின் தொடர்ந்து வந்தார். ஒருமுறை ரெயிலில் இருந்து தள்ளிவிட்டு கொல்ல முயற்சித்தார். இதுதவிர எனது ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு சென்ற அவர், தனது வீட்டுக்கு வந்து வாங்கிக்கொள்ளுமாறு அழைத்தார். இப்படி அவர் தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் காவல்துறை உதவியை நாடினேன். இதையடுத்து கேரளாவுக்கே சென்றுவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!