நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தைத் தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு, யோகிபாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. பொங்கல் வெளியீடாக அஜித் நடித்திருக்கும் ‘துணிவு’ படமும் ரிலீஸாக உள்ளதால் இப்போதே இரு படத்திற்குமான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு படத்திற்குச் சென்னை மெட்ரோ ரயில்களில் படக்குழு விளம்பரப்படுத்தியுள்ளது. மெட்ரோ ரயிலின் வெளிப்பக்கம் முழுவதுமாக ஒட்டப்பட்ட ‘வாரிசு’ போஸ்டர்கள் குறித்த வீடியோ வௌியாக வைரலாகி வருகிறது.