தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வுக்காக சேலம் சென்றடைந்தார். விமான நிலையத்தில் இருந்து சேலம் நகருக்கு செல்லும் வழியில் ஓமலூர் தாலுகா அலுவலகத்துக்கு திடீரென சென்றார். அங்கு தாசில்தார் மற்றும் அதிகாரிகளை அழைத்து தாலுகாவில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டார். பின்னர் வருகைப்பதிவை ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அங்கு மனு கொடுக்க வந்திருந்த பொதுமக்களையும் அழைத்து அவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் குறைகேட்டார். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் இறையன்பும் உடனிருந்தார்.