திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் அழகு நாச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (27). இவர் தனது நண்பர் சத்யராஜ் உடன் கோட்டைமேடு சன்னாசி அம்மன் கோவில் அருகே மது அருந்தியுள்ளனர். அப்போது கோட்டைமேடு நடுத்தெருவை சேர்ந்த ரகுபதி( 24), சுகுமார் (23), சரவணன் (40) ஆகியோர் அருகில் மது அருந்தியுள்ளனர். இந்நிலையில் ரகுபதியின் செல்போனை காணவில்லை என சுரேஷிடம் கேட்டுள்ளனர். இதில் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டு ரகுபதி சுகுமார் சரவணன் ஆகியோர் சுரேஷ் மற்றும் சத்யராஜ் ஆகிய 2 பேரையும் தாக்கி உள்ளனர். இதில் சுரேஷ் காயமடைந்து தொட்டியம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் ரகுபதி, சுகுமார், சரவணன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ரகுபதி மற்றும் சுகுமாரை கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.