திருச்சி மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த அன்பழகன் மேயராக உள்ளார். கடந்த 31ம் தேதி நடந்த மாமனற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், காஜாமலை விஜி, ராமதாஸ், செந்தில்குமார் ஆகியோர் டெண்டர் விவகாரத்தில் வௌிப்படை தன்மை இல்லை என்று ரேநடியாக மேயரை குற்றம் சாட்டி பேசியதோடு ஆய்வுக் கூட்டத்துக்கு செலவு செய்யப்பட்ட தொகைக்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்து சந்தேகங்களை எழுப்பினார். அதேகூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் காஜாமலை விஜி, ராமதாஸ் , செந்தில்குமார் உள்ளிட்டோரும் மேயரை குறைத்து பேசினர். இந்த விவகாரம் குறித்து அமைச்சர் நேருவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. தேர்தல் பணிக்காக சென்ற கவுன்சிலர்களை அழைத்த அமைச்சர் நேரு மாமன்ற கூட்டத்தில் மேயரை எதிர்த்து பேசுவதோ வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது என அட்வைஸ் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது…