நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் சிறப்பு வீடியோ இன்று வௌியாகி உள்ளது. பட்டையை கிளப்பும் இசையுடன் ரஜினி அரிவாளுடன் புறப்படுவது போல உள்ள அந்த வீடியோ செம மாஸ் ஆக உள்ளது. முன்னதாக முத்துவேல் பாண்டியன் இன்று வருகிறார் என்று சன் பிக்சர்ஸ் டிவிட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.