பெரம்பலூர் அருகே குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பின்புறம் ஆலடியான் கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள புகழேந்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த விவசாய நிலத்தில் இன்று மஞ்சள் அறுவடை பணி நடைபெற்றது. இந்த பணியின் போது சுமார் 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று மஞ்சள் செடிக்கு அடியில் படுத்திருந்ததை
கண்டு அறுவடை பணிக்கு வந்த பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர் . இந்த நிலையில் நில உரிமையாளர் புகழேந்தி மூலம் பெரம்பலூர் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை சிறப்பு நிலைய அலுவலர் ராமர் தலைமையிலான துரைசாமி, மாதேஸ்வரன், பால்ராஜ், விக்னேஷ், பிரவீன் ஆகியோர் மலைப்பாம்பை பிடித்து பெரம்பலூர் வனச்சரகத்திற்குட்பட்ட வனவர் பிரதீப்குமார் தலைமையிலான வனத்துறை குழவினரிடம் ஒப்படைத்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.