Skip to content
Home » நெல் கொள்முதல் நிலையத்தில் கூடுதல் கமிஷன் கேட்ட அதிகாரி பணி மாற்றம்….

நெல் கொள்முதல் நிலையத்தில் கூடுதல் கமிஷன் கேட்ட அதிகாரி பணி மாற்றம்….

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பாலராஜபுரம் ஊராட்சி ஜானனூரைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனது விளை நிலத்தில் விளைவித்த நெல்லை கடந்த பிப்ரவரி 8ம் தேதி புதன் கிழமை உள்வீரராக்கியத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

மறுநாள் பிப்ரவரி 9ம் தேதி அவரது நெல் கொள்முதல் செய்யப்பட்டு மூட்டை பிடிக்கப்பட்டு அதற்க்கான ரசீது வழங்கப்பட்டுள்ளது.

60 கிலோ அளவில் சுமார் 229 மூட்டைகள் பிடிக்கப்பட்டன. இதில் மூட்டை ஒன்றிற்கு 27 ரூபாய் என ரூ.6183 பணம் கமிஷனாக தரவேண்டும் என சூப்பர்வைசர் சந்திரகுமார் கேட்டுள்ளார்.

அதற்கு அவர் மறுக்கவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு சூப்பர்வைசர் அதே ஊரைச் சேர்ந்த சில நபர்களுடன் சேர்ந்து அவரது வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளார்.   இது குறித்து சிவகுமார் மாயனூர்

காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலைய கண்காணிப்பாளர் சிவலிங்கம், தர ஆய்வாளர் செல்வராஜ் ஆகிய இருவரும் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை மேற்கொண்டு அவர்கள் சூப்பர்வைசர் சந்திரகுமாரை  பணி மாற்றம் செய்து வேறொரு நபரை சூப்பர்வைசராக நியமித்து கொள்முதல் தடையின்றி தினந்தோறும் ஆயிரம் மூட்டைகள் வீதம் நெல் கொள்முதல் செய்யப்படும் என்றும் கூறினார்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாய இடம் மூட்டைக்கு 27 ரூபாய் கமிஷன் கேட்டு தற்காலிக பணி மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *