மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், தஞ்சாவூர், பாபநாசம் வட்டார ஆரம்பச் சுகாதார நிலையங்கள், மற்றும் பாபநாசம் விவேகானந்தா சமூக கல்வி தொண்டு நிறுவனம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பாபநாசத்தில் நடந்த முகாமில் 173 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு, கண் புரை முற்றிய நிலையில் இருந்த 17 பேர் அறுவைச்
சிகிச்சை மேற்கொள்ள தஞ்சாவூர் இராஜா மிராசுதார் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். 50 பேருக்கு மேல் கண்ணாடி அணிய பரிந்துரைக்கப் பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் தீபக், வட்டார மேற்பார்வையாளர் பாஸ்கரன், கண் மருத்துவ உதவியாளர் ரெங்கராஜ், தொண்டு நிறுவனச் செயலர் கண்ணதாசன் உட்பட பங்கேற்றனர்.