அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி இன்று அரியலூர் நகர அண்ணா சிலை அருகே அரியலூர் நகர காவல் ஆய்வாளர் கோபிநாத் மற்றும் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள், மது மற்றும் போதை
பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
ஜெயங்கொண்டம் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஷகிரா பானு ஜெயங்கொண்டம் நகரில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆட்டோ ஓட்டுநர்கள், மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இதேபோன்று அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் ,செந்துறை , தளவாய்,விளாங்குடி ,த.பழூர் மற்ற பகுதிகளிலும் காவல்துறையினர் சாலை பாதுகாப்பு மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா ,கஞ்சா முதலிய போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.
தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் உபயோகிப்பவர் குறித்தும், விற்பனை குறித்தும் எவ்வித அச்சமும் இன்றி காவல் துறைக்கு தகவல் அளிக்கலாம் தகவல் அளிப்பவர் என் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.