அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் சிறப்பு திட்டமான பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், 620 மாணவ,மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள் வழங்கும் திட்டம் மற்றும் மாணவ,மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.விஜயலெட்சுமி,ஒருங்கினைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்
பன்னீர்செல்வம்,மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை) ஜெயா,ஜெயங்கொண்டம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் மேகநாதன்,ஜெயங்கொண்டம் வட்டார கண் மருத்துவ பரிசோதகர் மதியழகன், வட்டார கல்வி அலுவலர்கள் மதலைராஜ்,ராஜாத்தி,அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள்,இருபால் ஆசிரிய பெருமக்கள்,மாணவ,மாணவிகள் கலந்துக்கொண்டனர்.