Skip to content
Home » வாஜ்பாய்ஆட்சியை கவிழ்த்த அதிமுகவுடன், பா.ஜ.க. கூட்டணி வைக்கலாமா? பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

வாஜ்பாய்ஆட்சியை கவிழ்த்த அதிமுகவுடன், பா.ஜ.க. கூட்டணி வைக்கலாமா? பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், உங்களில் ஒருவன் பதில்கள்” தொடரில் கேள்விகளுக்கு அளித்துள்ள பதில்கள் பின்வருமாறு.

கேள்வி: அண்மையில் உங்களை நெகிழ வைத்த மனிதர் அல்லதுசம்பவம் ஏதாவது இருக்கிறதா?

பதில்: சிறைக் கைதிகள் படிக்கின்ற வகையில் சிறைச்சாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்திவருகிறது.இதற்காகச் சிறைத்துறைக்குப் பலரும் ஆர்வத்தோடு புத்தகங்களை வழங்கி வருகிறார்கள்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த பெரியவர் – 92 வயதான பாலகிருஷ்ணன் சேகரிப்பில் இருந்த 300 புத்தகங்களையும்அவர்கள், தனதுசிறைத்துறைக்கு வழங்கி இருக்கிறார்.தன் வாழ்நாளெல்லாம் சேகரித்த புத்தகங்களில் ஒரு பகுதியை சிறைக்கைதிகள் பயன்பெற வேண்டும் என்று கொடுத்திருக்கும் அவரது முடிவு மிகவும் பாராட்டத்தக்கது.

உண்மையிலேயே இந்தச் செய்தியைப் பாத்து நெகிழ்ந்து போனேன். இதைப் பலரும் பின்பற்ற வேண்டும்.
மிசாவில் அரசியல் கைதியாக நான் இருந்தபோது, நிறையபுத்தங்களைப் படிக்கும் வாய்ப்பு சிறைச்சாலையில் கிடைத்தது.அரசியல், வரலாற்று புத்தகங்களை தாண்டி நிறைய நாவல்களையும் படித்தேன். சிறைச்சாலைத் தனிமையைப் போக்க நல்ல நண்பன் புத்தகங்கள்தான்.

கேள்வி: ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்கிற திட்டத்தை வேலூர் மண்டலத்தில் தொடங்கி வைத்திருக்கிறீர்கள். இந்த ஆய்வின்அனுபவமும், தாக்கமும் எப்படி இருந்தது?

 

பதில்: வேலூர் புறநகர் அலமேலுமங்காபுரம் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிக்குச் சென்று காலை உணவுத் திட்டத்தை ஆய்வுசெய்தேன்.அதேபோல மாணவர்களுக்கான உணவு தயாரிக்கும் மையத்தையும்சென்று பார்த்தேன்.உணவு தரமாக தயார் ஆகிறதா. உரிய நேரத்துக்கு கொண்டுபோய்க் கொடுக்கப்படுகிறதா என்று பார்த்தேன். சாப்பிடுகிற உணவு சுவையாவும், சூடாவும் இருப்பதாகப் பள்ளிக்குழந்தைகள் சொன்னார்கள்.

இதைக் கேட்டபோது. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.அதிகாரிகள், அலுவலர்களோடு இரண்டு நாட்கள் அமர்ந்து – வேலூர்.ராணிப்பேட்டை. திருப்பத்தூர். திருவண்ணாமலை மாவட்டத்தில்செயல்படுத்தப்பட்டு வருகிற அனைத்துப் பணிகள் குறித்தும் ஆய்வுசெய்தேன்.அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள் என்பதை அறிந்து எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

ஒரு சில இடங்களில் சுணக்கம் இருந்தாலும் – அதுவும் அன்று முதல் சரி செய்யப்பட்டு விட்டது. யார் மேலேயும் நம்பிக்கை இல்லாமலோ இந்த ஆய்வுத் திட்டத்தை நான் தொடங்கவில்லை.
வருகிற 15. 16 தேதிகளில்சேலத்துக்குச்செல்கிறேன்.சேலம்.நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டப் பணிகளை ஆய்வு செய்யஇருக்கிறேன்.இன்னும் திட்டங்கள் எவ்வாறு சிறப்பாகக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டுபோய் சேர்க்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காகத்தான் இந்த ஆய்வு.

கேள்வி: புதுமைப் பெண் – கல்வித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறீர்கள். இந்தத் திட்டத்தின் பயனை  மாணவிகள் உணரத் தொடங்கி இருப்பதாகக் கருதுகிறீர்களா?

பதில்: நிச்சயமாக கருதுகிறேன்!அரசாங்கமே ஆயிரம் ரூபாய் தருவதை தன்னுடைய பெற்றோரிடம் சொல்லி அடம்பிடித்து. இப்போது கல்லூரியில் சேர்ந்திருப்பதாக மகாலட்சுமி பேட்டி கொடுத்திருக்கிறார். வெள்ளாத்தூரைச் சேர்ந்த சுல்தானா பர்வீன் என்கிற மாணவி, ஓராண்டாகக் கல்லூரிக்கு போகவில்லை. அந்தத்திட்டத்தைப்பற்றிகேள்விப்பட்டுஅதன்பிறகுதான் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்.

கேள்வி: பொய் வாக்குறுதிகளைக் கொடுத்துதான் திமுக ஏற்கனவேவெற்றி பெற்றுவிட்டதுஎன்று. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருக்கிறாரே?

பதில்: தூத்துக்குடியில் போராடுடியவர்களைத் துப்பாக்கியால் சுடச் சொல்லிவிட்டு, டிவியை  பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்’ என்றுபொய் சொன்னாரே அந்த பழனிசாமியா?அவர்அப்படித்தான் பேசுவார்.

கேள்வி: நாடாளுமன்றத்தில் பிரதமா் ஆற்றிய பதிலுரை பற்றி உங்கள் பார்வை என்ன?

பதில்: யார் கேட்ட கேள்விக்கும் பதிய சொல்லாமல் மணிக்கணக்கில்எவ்வாறு பேசுவது என்பதை நான் தெரிந்து கொண்டேன், நாட்டு மக்கள் கவசமாக இருக்கிறார்கள் என்று நாட்டு மக்கள் சொல்லவில்லை. அவராக சொல்லிக்கொண்டார்.  சேறு வீசுங்கள் தாமரை மலரும் என்று பிரதமர் சொன்னார்.  நீர்நிலைகளில் மலரும் பூ தான் தாமரை. அதற்காக நீர் உள்ள இடத்தில் எல்லாம் மலர்ந்திடாது. சேறு உள்ள இடத்தில் எல்லாம் மலர்ந்திடாது. வார்த்தை ஜாலங்கள் தான் அவருடைய பேச்சில் இருந்ததே தவிர  பிபிசி ஆவணப்படம் பற்றியோ, அதானி விவகாரம் பற்றியோ அவர்  விளக்கம் அளிக்கவில்லை.

நாட்டுக்கு கொடுத்த வாக்குறுதியில் எதை நிறைவேற்றி இருக்கிறோம் என்று பிரதமா்  வரிசைப்படுத்தவில்லை.சேதுசமுத்திரத் திட்டம், நீட் ,மாநில உரிமைகள், ஆளுநரின்தலையீடுகள். ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காதது என எத்தனையோ கேள்விகளை தி.மு.க. உறுப்பினர்கள் கேட்டார்கள். எதற்கும் பிரதமர் உரையில் பதில் இல்லை. குறிப்பாக தமிழ்நாட்டுக்கு சொல்ல பிரதமரிடம் எதுவும் இல்லை.

கேள்வி: தி.மு.க ஆட்சியைக் கலைத்த காங்கிரஸ் உடன் கூட்டணிவைக்கலாமா  என்று கேட்கிறாரே பிரதமர்?

பதில்: பாஜக ஆட்சியை (வாஜ்பாய் ஆட்சி) கவிழ்த்த அதி.மு.க.வோடுகூட்டணி வைத்திருக்கிறவர் இதைக் கேட்கலாமா?

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *