பிரபல தமிழ் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார்.
சமந்தா நடித்த யசோதா படம் கடந்த ஆண்டு நவம்பர் 11 ம் தேதி வெளியானது. வாடகைத் தாயாக நடிகை சமந்தா இந்த படத்தில் நடித்திருந்தார்.
தற்போது சமந்தா கதாநாயகியாக நடிக்க “சகுந்தலம்” திரைப்படம் உருவாகி வருகிறது. பான் இந்திய படமாக உருவாகும் இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.
சமந்தா, தெலுங்கில் ‘குஷி’ படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். படிக்கட்டுகளில் ஏறி சூடம் மற்றும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. சமந்தாவுடன் 96 பட இயக்குனர் பிரேம் குமார் மற்றும் நண்பர்கள் வந்திருந்தனர். செய்தியாளர்களை சந்தித்த சமந்தா உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட பிறகு தற்போது கடவுளின் அருளால் மருத்துவர்கள் ஆலோசனையில் உடல் நலம் பெற வேண்டுதல்களை நிறைவேற்ற பழனி முருகன் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்ததாக கூறினார்.
சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். அவரது இயற் பெயர் சமந்தா ரூத். இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் விவாகரத்து பெற்றார். அப்போது ஜீவனாம்சமாக பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கொடுக்க நாகசைதன்யா முன்வந்தும் அதை ஏற்க மறுத்து விட்டார். சமந்தா சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர்.