மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அனலாக் நிலுவைத் தொகையை கூறும் அறிவிப்புகளை தள்ளுபடி செய்ய வேண்டும், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட செட் ஆப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதை உடனே நிறுத்த வேண்டும், கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கான நல வாரியத்தை உடனே செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் அவர்களிடம் மனுவை அளித்தனர். இதில் மயிலாடுதுறை, குத்தாலம் தரங்கம்பாடி,சீர்காழி ஆகிய நான்கு தாலுக்காவை சேர்ந்த கேபிள் ஆபரேட்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.