Skip to content
Home » கரூரில்…..2 பேர் ரயிலில் அடிபட்டு பலி…

கரூரில்…..2 பேர் ரயிலில் அடிபட்டு பலி…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூர் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆண் பெண் இருவர் அவ்வழியாக வந்த மயிலாடுதுறை -மைசூர் விரைவு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

விசாரணையில் அவர்கள் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் (50) மற்றும் மாயனூரைச் சேர்ந்த போதும் பொண்ணு (35)  என தெரியவந்தது. பெருமாள் தனது மனைவியையும், போதும்பொண்ணு தனது கணவனையும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில்,  தற்போது  பெருமாளும், போதும்பொண்ணுவும்  வாழந்து வந்தனர்.  இந்நிலையில் மாயனூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஊருக்கு செல்வதற்காக ரயில் நிலைய தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளனர்.

அப்போது அவ்வழியாக வந்த மயிலாடுதுறை -மைசூர் விரைவு ரயில் மோதியதில் இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இது குறித்து தகவல் இருந்த கரூர் ரயில்வே போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து திருச்சி உட்கோட்ட ரயில்வே டிஎஸ்பி பிரபாகரன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருச்சி உட்கோட்டத்தில் 11 ரயில் காவல் நிலையங்கள் உள்ளது, இதில் கரூர்

ரயில் நிலையப் பகுதியில் தான் அதிகளவில் ரயில் விபத்துகள் நடைபெற்று வருவதாகவும், ரயில் தண்டவாளர்களின் மூலம் இயற்கை உபாதை கழிக்க செல்பவர்கள் மற்றும் தற்கொலை எண்ணத்துடன் பலரும் ரயில் முன் பாய்ந்து உயிரிழப்பதாகவும், இவ்வாறு ரயிலில் முன் பாய்ந்தது தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என பல்வேறு கிராமப் பகுதி பொது மக்களுக்கும் ரயில் தண்டவாளத்தின் அருகே வசிப்பவர்களுக்கும் பல்வேறு ஆலோசனைகளையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம் . ஆனால் அதனை மீறி எதிர்ப்பாராத விதமாக சில விபத்துக்கள் ஏற்படுவதாகவும், கரூரில் கடந்த ஆண்டில் மட்டும் 34 பேர் ரயில் விபத்தில் தங்களது உயிரை இழந்துள்ளதாகவும் இதில் 15 பேர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் ரயில் முன் பாய்ந்து உள்ளதாகவும் தெரிவித்தார். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உடையவர்கள் ரயில் முன் பாய்ந்து உயிர் இழக்க வேண்டாம் எனவும் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *