பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பென்னகோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசி. இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு எழிலன், மகிழன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவரது கணவர் மகேஷ் என்பவர் ரியல் எஸ்டேட் தொடர்பான தொழிலில் ஈடுபட்டு வருகிறார். மகேஷ் அதே ஊரில் அரசு பள்ளியில் பணியாற்றும் கலாராணி என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்து கொண்டு தன்னையும் தனது பிள்ளைகளையும் கொடுமை படுத்துவதாக கூறி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க தனது பிள்ளைகளுடன் வந்தார்.
ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே திடீரென மண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் .. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று தண்ணீர் ஊற்றினர்.
இவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும் போது ஆட்சியர் அலுவலகத்தில் வெளியே பெண் ஒருவர் தனது மகளுடன் திடீரென்று மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அருகிலிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து தண்ணீர் ஊற்றினர்.அவர்களிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மனைவி கலா என்பதும் அவருடன் பிறந்த தர்மராஜ் என்பவர் தனது வீட்டிற்கு அருகே வசிப்பதாகவும் , தங்களுக்கு சொந்தமான பூர்வீக நிலத்தை விற்றதில் தனக்கும் தனது அம்மாவிற்கு மற்றும் தம்பி தர்மராஜிற்கும் பாகமாக பிரித்து கொடுத்துள்ளதாகவும் அதில் தனக்கு 4 லட்சம்கொடுத்துவிட்ட நிலையில் எனக்கு கொடுத்த 4 லட்சத்தை கேட்டு தனது தம்பி தன்னோடு தகராறில் ஈடுபட்டு தன்னையும் தனது மகளையும் கொடுமை படுத்தி வருவதாகவும் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்த முடிவில் ஈடுபட்டதாக கூறினார்.