அண்மையில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடித்து கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘பதான்’ திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பையும், வசூலில் சாதனையும் படைத்து வருகிறது.
இப்படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட் பாட்ஷா, சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஷாருக்கான் தற்போது ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் அட்லி இயக்கி வருகிறார். படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
மேலும் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதியும், நகைச்சுவை நடிகராக யோகிபாபுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஜவான் படத்தின் தயாரிப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ‘பதான்’ திரைப்படம் சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக நடிகர் ஷாருக்கான் மும்பையில் இருந்து நேற்று சென்னை வந்தார்
சென்னை வந்த அவர், தன்னுடன் கதாநாயகியாக நடித்து வரும் நயன்தாராவின் இல்லத்திற்கு சென்றார். ஷாருக்கான் வருவதை அறிந்த, நயன்தாரா வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மற்ற குடியிருப்புவாசிகள் அவருடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நயன்தாராவை சந்தித்த நடிகர் ஷாருக்கான் சிறிது நேரம் அவரது வீட்டில் இருந்து, அவருடன் பேசிவிட்டு, விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதிகளுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளையும் பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்.
பின்னர் தனது வீட்டில் இருந்து கிளம்பிய நடிகர் ஷாருக்கானை, நயன்தாரா அவரது கார் வரை சென்று வழியனுப்பி வைத்தார். ஷாருக்கான் காரில் ஏறுவதற்கு முன்பாக
நயன்தாரா ஷாருக்கானின் கன்னத்தில் முத்தமிட்டார்.தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஷாருக்கான் அங்கிருந்த எல்லோருக்கும் பறக்கும்முத்தம் கொடுத்து விட்டு கிளம்பினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.