திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் பகுதியைச் சேர்ந்த புஷ்பம் ( 67). மூச்சு திணறல் காரணமாக டோல்கேட்டில் உள்ள பார்க்கவன் மருத்துவமனைக்கு சென்றனர். அங்குள்ள மருத்துவரின் அறிவுரைப்படி செக்போஸ்ட் பகுதியில் உள்ள சுகம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் வைத்து சிகிக்சை அளிக்கப்பட்டது. அப்போது திடீரென புஷ்பம் இறந்தார். சிகிச்சையில் இருந்த போது அவர் இறந்ததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். வெண்டிலேட்டர் வைத்து சிகிச்சை அளித்த போது ஆக்சிஜன் லெவல் பார்க்கும் வால்வு வெடித்ததால் புஷ்பம் உயிரிழந்தாக தகவல் வெளியானது. சுகம் ஆஸ்பத்திரி டாக்டர்களின் கவனக்குறைவால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:சமயபுரம் டோல்கேட்