நாடாளுமன்றத்தில் ஜீரோ அவரில் திருச்சி எம்பி திருநாவுக்கரசர் பேசியதாவது: திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் பஸ் நிலையம் அருகே ரயில்வே கேட் மூடப்பட்டதால், மக்கள் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். ரோடு ஓவர் பிரிட்ஜ் அமைப்பதற்கு உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் இந்த கேட் ரயில்வே துறையால் ஒருதலைபட்சமாக மூடப்பட்டுள்ளது. இதனால் 50 மீ தொலைவில் உள்ள ரயில் நிலையத்தை 3 கிமீ தூரத்துக்கு சுற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே ரயில்வே யார்டில் மூடப்பட்ட கேட்டை மீண்டும் திறக்க வேண்டும். அல்லது மேற்கூறிய இடத்தில் சாலையின் கீழ் பாலம் அமைக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.