நாக்பூர் டெஸ்டில் இந்தியா அபாரமாக ஆடி ஒருஇன்னிங்ஸ் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்று உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், 2 வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதுடன், முதல் இன்னிங்சில் 70 ரன்களும் அடித்தார்.
இந்த நிலையில் ஜடேஜாவுக்கு ஐசிசி நிர்வாகம் 25% அபராதம் விதித்து உள்ளது. போட்டியின் இடையே ஜடேஜா தனது கைவிரலில் உள்ள காயத்திற்கு வலி நிவாரணி மருந்தை தடவினார். நடுவர்களிடம் தெரிவிக்காமல் இதை செய்ததற்காக அவர் முதல் டெஸ்ட் சம்பளத்தில் 25 % அபராதமாக செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.