பெரம்பலூர் மாவட்டத்தில் மீலாது விழா சார்பில் மீலாது மினி மாரத்தான் போட்டி வடக்கு மாதிரி சாலையில் உள்ள நிஸ்வந்த் மஹாலில் இருந்து தொடங்கப்பட்ட மினி மாரத்தான் பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்திய மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற ஒருமைப்பாட்டை வலியுறுத்தி இந்த ஏற்பாட்டை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். மினி மாரத்தான் போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள
100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் பெரம்பலூர் நகராட்சி துணைதலைவர் ஹரிபாஸ்கரன் நகராட்சி 13 வது வார்டு உறுப்பினர் நல்லுசாமி பெரம்பலூர் அரியலூர் மாவட்ட தலைவர் மௌலவி முஹம்மது முனீர் ஹஜ்ரத் , நிர்வாக தலைவர் அல்ஹாஜ் சர்புதீன் ஹக்கிய்யுல் காதிரிய், இளைஞரணியினர் ஹிதாயதுல் ஹக், ஜாஸிம் ,ஆஷிக்அலி, ஷாருக்கான் ,சம்சுதீன் மற்றும் அனைத்து பொதுமக்களும் முஸ்லிம் நண்பர்களும் பல கலந்து கொண்டனர்.