இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் நாக்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. 177 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதைத்தொடர்ந்து முதல் நாளே இந்தியாவும் பேட்டிங் செய்தது. ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் சேர்த்தது. நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. இதில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 120 ரன்கள் குவித்தார். நேற்று ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு321 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று காலை 3ம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா 70 ரன்களுக்கும், அக்சர் பட்டேல் 84 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். சிறிது நேரத்தில் முகமது சமியும் ஆட்டமிழந்ததால் , இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் 400 ரன்களில் முடிவுக்கு வந்தது. இதில் ஆஸ்திரேலியாவின் அறிமுக வீரர் மர்பி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். முதல் இன்னிங்சில் இந்தியா, ஆஸ்திரேலியாவை விட 223 ரன்கள் அதிகம் பெற்றுள்ளது. தொடர்ந்து ஆட்டம் நடக்கிறது.