திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரியை சேர்ந்தவர் சகாயசுந்தரி(49) இவர் 1997ல் இடைநிலை ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். இவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பதாக கல்வி அதிகாரிக்கு புகார் வந்தது. அதன் பேரில் இவரது சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டதில் சகாய சுந்தரியின் சான்றிதழ்கள் போலி என கண்டறியப்பட்டது. இது குறித்து முசிறி கல்வி அதிகாரி, திருச்சி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது சகாய சுந்தரி மண்ணச்சநல்லூர் அடுத்த மூவராயன்பாளையம் தொடக்கப்பள்ளியில் வேலை செய்து வந்தார்.
Tags:போலி டீச்சர்