ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. இங்கு அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அதிமுக நிர்வாகிகள் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் எம்.பியுமான ப.குமார், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி , அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பியுமான டி .ரத்தினவேல் ஆகியோர் தலைமையில் திருச்சி மாவட்ட அதிமுகவினர் பூத் எண் 234க்கு உட்பட்ட ஆலமரத்தெரு, முனிசிபல் சத்திரம்,
நேதாஜி ரோடு பகுதியில் வீடு வீடாக இரட்டை இலை சின்னத்துடன் சென்று வாக்கு சேகரித்தனர். அவர்களுக்கு மக்கள் ஆதரவு அளித்து வரவேற்றனர்.
இவர்களுடன் ஒன்றிய கழக செயலாளர்கள் S.S.ராவணன், S.K.Dகார்த்தி, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் விடிஎம் .அருண்நேரு, சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் எஸ். சகாதேவ்பாண்டியன், முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் ஜெ.பாலமூர்த்தி மாவட்ட பிரதிநிதி அழகர், ஒன்றிய கவுன்சிலர் பொய்கைகுடி த.முருகா, மற்றும் முன்னாள் கவுன்சிலர் ரவி, உள்ளூர் பொறுப்பாளர் வட்ட கழக செயலாளர் சம்பத் ,வட்ட கழக பொறுப்பாளர்கள் மாரியப்பன், மணி, ஆனந்தகுமார், சண்முகசுந்தரம்ஆகியோர் பங்கேற்றனர்.