டெல்டா மாவட்டங்களில் கடந்த வாரம் திடீரென பெய்த மழையின் காரணமாக அறுவடை செய்யப்பட்டிருந்த நெல் மழையில் நனைந்து அவற்றின் ஈரப்பதம் அதிகரித்தது. எனவே 22 % ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய உத்தரவிடவேண்டும் என மத்திய அரசுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வந்தது.
கடந்த 2 நாட்களாக அவர்கள் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். இன்று அவர்கள் திருச்சி மாவட்டம் வந்தனர். திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய வேளாண் தரகட்டுப்பாட்டு குழுவை சேர்ந்த உயர் அதிகாரிகள் யூனுஸ், பிரபாகரன், போயா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து குண்டூர் பகுதிகளிலும்
நெல்லின் ஈரப்பதம் குறித்து நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வு செய்தபோது ஒரு விவசாயி கொண்டு வந்திருந்த நெல்லின் ஈரப்பதம் 16.7 என்றும் மற்றொருவரது நெல் ஈரப்பதம் 17.9 என்றும் வந்தது அந்த மாதிரிகளை எடுத்துச் சென்றனர்.