நாகப்பட்டினத்தில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அபித குஜாம்பாள் உடனுறை அமர நந்தீஸ்வரர் கோவிலின் மகா கும்பாபிஷேகம் விழாவின் விக்னேஷ்வர பூஜை கடந்த 5, தேதி துவங்கியது. அதனை தொடர்ந்து கோயிலில் உள்ள சூழினி துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியனார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பூர்ணாஹூதி
தீபாராதனைகள் நடைபெற்று வந்தன. இன்று காலை 6-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்ற பின்னர் மேளதாள வாத்தியங்களுடன் கடங்கள் கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டன. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோயிலில் உள்ள கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அபித குஜாம்பாள் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.