சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் இயங்கி வரும் ஒரு நகைக்கடையில், நேற்று இரவு துணிகர கொள்ளை நடந்துள்ளது. தகவல் அறிந்த வியாசர்பாடி குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
நகைக்கடையில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். நகைக்கடையின் ஷட்டரை வெல்டிங் மெஷினால் வெட்டி கடைக்குள் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.
நகைக்கடையிலிருந்து 9 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட வைர கற்களின் விலை 20 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.