திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கலிங்கமுடையான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மெய்யம்பட்டி கிராமத்தில் மளிகை வியாபாரம் செய்து வருபவர் கண்ணன் கடந்த 09.02.2023 தேதி வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார் மறுநாள் காலை அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் கடை பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடப்பதைக் கண்டு கடை உரிமையாளர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக கடைக்கு ஓடிவந்த கண்ணன் கடையில் வைத்திருந்த ரூ. 50,000 ரொரக்கம் மற்றும் 5 மூட்டை அரிசிகள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி துறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திர்க்கு சென்ற போலீசார் திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள் அப்போது நேற்று முசிறி டிஎஸ்பி ஜாஸ்மின் தலைமையில் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துச்சாமி முத்துச்செல்வன் மற்றும் போலீசார் செந்தில் அசோக் உள்பட அடங்கிய தனிப்படையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார்கள் அப்போது பெருமாள் மலை அடிவாரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு பைக்கில் வந்த இருவரை மடக்கி பிடித்து தீவிர விசாரணை செய்தபோது அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்கள்.
இதனை அடுத்து அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது. மணிமாறன் மற்றும் சஞ்சீவி என்பது தெரியவந்தது இதனை அடுத்து அவர்களை கைது செய்து விசாரணை செய்த போது அவர்கள் வழிபறி வழக்குகளில் தொடர்புடையது தெரிய வந்தது.
இதை அடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மணி என்கின்ற மணிமாறன் வயது 22 மற்றும் செந்தில்குமார் வயது 35 சஞ்சீவி வயது 24, கரண் ,அஜித் ஆகியோர் மெய்யம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற திருட்டில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது இதை அடுத்து அவர்களிடம் இருந்து எட்டு மூட்டை அரிசியும் 3 லேப்டாப் களும் ஒரு பைக்கும் பறிமுதல் செய்தார்கள்.
ஐந்து நபர்களில் கரண் ,அஜித் மைனர் என்பதால் அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர் மீதமுள்ள மூவரை கைது செய்து துறையூர் போலீசார் சிறையில் அடைத்தார்கள்