தமிழ்நாட்டில் இன்னும் ஐந்து நாட்களில் பனியின் தாக்கம் குறையும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ஜனவரி, பிப்ரவரி மாதங்களை குளிர் கால மாதங்கள் என்று சொல்லுவோம். பிப்ரவரியில் வெப்பநிலையானது 30 டிகிரி முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உள்ளது. பகல் நேரங்களில் வெப்பம் காரணமாக நீர் நிலைகள் மற்றும் தாவரங்களிலிருந்து நீர் ஆவியாகி மேலே நகர்கிறது. இரவு நேரங்களில் மேகங்கள் இல்லாத சூழ்நிலையில் குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக காற்று இல்லாத காரணத்தினால், அந்த நீர்த்துளிகள் காற்றிலுள்ள தூசுக்களில் படிந்து இந்த மாதிரியான சூழலை நமக்கு தருகிறது. இது ஒருசில பகுதிகளில் நிகழக்கூடிய ஒன்று. தற்போது அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக இந்த பனியின் தாக்கம் அடுத்த நான்கு, ஐந்து நாட்களில் குறைந்துவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:பனி எப்போது குறையும்