ஈரோடு கிழக்குதொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 31-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடந்தது. இடைத்தேர்தலில் போட்டியிட 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் 83 பேரின் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இன்று மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம் என்பதால் சுயேச்சைகள் ஒருசிலர் வேட்புமனுக்கள் வாபஸ் பெறுவார்கள்.
அதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு நடைபெறும். ஒன்றுக்கு மேற்பட்ட சுயேச்சைகள் ஒரே சின்னத்தை கோரினால் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கப்படும். இடைத்தேர்தலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் வேட்பாளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.