சென்னை வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின்(டிஆர்ஐ) தகவலின் அடிப்படையில் மண்டபம் கடலோர காவல் நிலைய போலீசார் கடந்த 7 மற்றும் 8ம் தேதி கடலில் படகு மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 8ம் தேதி சந்தேகத்துக்குரிய ஒரு படகில் போலீசார் ஏறி சோதனை செய்தனர். ஆனால் அதில் எந்த கடத்தல் பொருளும் சிக்கவில்லை. எனினும் கடத்தல் பொருள் கடலில் வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நீச்சலில் பயிற்சி பெற்ற ஐசிஜி குழுவினர் டைவிங் ஆபரேஷன் என்ற நடவடிக்கை மூலம் கடலில் மூழ்கி தேடினர். இதில் 17.74 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. இது தொடர்பாக ஒரு படகு மற்றும் அந்த படகில் வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மண்டபம் கடலோர காவல்நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:நகை மீட்பு